கோவா விமானம் தாமதம் : நடிகை நக்மா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
மும்பை விமான நிலையத்தில் இருந்து கோவா செல்லும் ஏர் இந்தியா விமானம் காலை 9 மணி அளவில் வழக்கம் போல் புறப்பட்டு செல்லும்.
மும்பை,
நேற்று காலை அந்த விமானத்தில் பயணிப்பதற்காக பயணிகள் வரவேற்பு அறையில் காத்து இருந்தனர். இந்த விமானத்தில் நடிகை நக்மாவும் கோவா செல்ல காத்து இருந்தார். ஆனால் அந்த விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனது. ஆனால் அதுபற்றிய முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யப்படவில்லை.
இதனால் பயணிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. திடீரென பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் நடிகை நக்மாவும் கண்டன கோஷம் எழுப்பினார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு உண்டானது.
இது பற்றி அறிந்த விமான நிலைய அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தினர். பின்னர் சுமார் 4 மணி நேரம் கழித்து அந்த விமானம் புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story