புவனகிரியில், ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் - போலீசார் விசாரணை


புவனகிரியில், ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Jun 2019 4:15 AM IST (Updated: 15 Jun 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை அபேஸ் செய்யப்பட்டது இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி, 

புதுச்சத்திரம் அருகே உள்ள தாழஞ்சாவடி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மனைவி ராசாயி (வயது 40). இவர் தனது உறவினர் ஒருவரின் இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக கிருஷ்ணாபுரத்துக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி தாழஞ்சாவடியில் இருந்து புவனகிரிக்கு பஸ்சில் சென்றார். பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ்சில் ஏறி கிருஷ்ணாபுரத்துக்கு புறப்பட்டார். பஸ் சிறிது தூரம் சென்றபோது ராசாயி தனது கழுத்தை பார்த்தார். அப்போது அவர் அணிந்திருந்த 5 பவுன் நகை காணாமல் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் அந்த நகையை அபேஸ் செய்து கொண்டு சென்றதாக தெரிகிறது. அந்த நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story