திருத்துறைப்பூண்டியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு ஊர்வலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


திருத்துறைப்பூண்டியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு ஊர்வலம் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 16 Jun 2019 4:15 AM IST (Updated: 16 Jun 2019 12:10 AM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார் தொடங்கி வைத்தார்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அமைப்பு (சைல்டு லைன்) சார்பில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு ஊர்வலம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. ஊர்வலத்தை திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம், பாரத மாதா சேவை நிறுவனங்களின் தலைவர் மணிமாறன், நாம்கோ தொண்டு நிறுவன இயக்குனர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மூலம் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருத்துறைப்பூண்டி அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம், புதிய பஸ் நிலையம் வரை நடந்தது.

நடவடிக்கைகள்

14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துபவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஊர்வலத்தின்போது போலீசார் விளக்கம் அளித்தனர். திருத்துறைப்பூண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஸ்பநாதன், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சங்கீதாமணிமாறன், ஆரோக்கியசாமி, ஆட்டோ சங்க தலைவர் முருகப்பா, செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட தலைவர் நபி, மாவட்ட துணைச்செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் பிரகலாதன் வரவேற்றார். முடிவில் முருகேசன் நன்றி கூறினார்.

Next Story