தனித்தனி விபத்தில் 2 பேர் பலி
மயிலம், திண்டிவனம் அருகே நடந்த தனித்தனி சாலை விபத்தில் 2 பேர் பலியாகினர்.
மயிலம்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேர்வைகாரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் வினோத்குமார் (வயது 32). இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவர் குடும்பத்துடன் ஒரு காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை அதே கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் வினோத்குமார் (35) என்பவர் ஓட்டினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே கன்னிகாபுரம் என்ற இடத்தில் சென்றபோது, டயர் வெடித்து அங்கு நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதியது.
இதில் காரில் வந்த மலைக்கொழுந்து மகன் ராஜா(28) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் காரில் வந்த வினோத்குமார், இவருடைய மனைவி பிரியதர்ஷினி (28), உறவினர்கள் விஜயலட்சுமி (60), மாரியப்பன்(69), நாகலட்சுமி (55), டிரைவர் வினோத்குமார் (35) ஆகிய 6 பேரும் காயமடைந்தனர். இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் நாகப்பட்டினம் மாவட்டம் மேலையூரை அடுத்த ராஜபுரம் கோனேரியை சேர்ந்தவர் அரவிந்த் (43). இவர் திண்டிவனத்தை அடுத்த கோனேரிகுப்பம் தேசிய நெடுஞ்சாலை யில் ‘மார்கிங்’ போடும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற லாரி அரவிந்த் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்துகள் குறித்து மயிலம், திண்டிவனம் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story