அமைந்தகரையில் அம்மா உணவக காவலாளி அடித்துக்கொலை


அமைந்தகரையில் அம்மா உணவக காவலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 16 Jun 2019 4:00 AM IST (Updated: 16 Jun 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

அமைந்தகரையில் அம்மா உணவக காவலாளியை அடித்துக்கொல்லப்பட்டார். இதுதொடர்பாக தாய்–2 மகள்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆவடி,

சென்னை அமைந்தகரை எம்.எம். காலனியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 72). இவர் திருமங்கலம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் இவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் அமுதா (63) என்பவருக்கும், பாண்டுரங்கத்திற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து பிரச்சினை அதிகமானதால் அமுதா, அவரது மகள்கள் ஆர்த்தி (38), நாகமணி (32) மற்றும் அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சோலைமுத்து (40) ஆகியோர் சேர்ந்து பாண்டுரங்கனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் கீழே விழுந்த பாண்டுரங்கன் தலையில் பலத்த காயம் அடைந்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை பாண்டுரங்கன் இறந்தார்.

இதுகுறித்து அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா, அவரது மகள்கள் ஆர்த்தி, நாகமணி மற்றும் சோலைமுத்து ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.


Next Story