10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் : செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
10-ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
மும்பை,
மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி 10-ம் வகுப்பு படித்து வந்தாள். மாணவி தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தகிசர் குடிசைப்பகுதி குழந்தைகள் படிக்க உதவி செய்து வந்தார். இதன் காரணமாக அவள் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவனுடன் ஆட்டோவில் தகிசர் குடிசை பகுதி குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுக்க சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென அந்த மாணவன் பணமில்லை என கூறி பாதி வழியில் ஆட்டோவில் இருந்து மாணவியுடன் இறங்கினான். பின்னர் குறுக்கு வழியில் நடந்து செல்லலாம் என கூறி அவளை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்றான். அங்கு வைத்து அந்த மாணவன், சான்நவாஸ் சேக் (வயது19) என்ற வாலிபருடன் சேர்ந்து மாணவியை கற்பழித்தான்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் வாலிபர் மற்றும் மாணவனை கைது செய்தனர். இதில் மாணவன் மைனர் என்பதால் அவன் மீதான விசாரணை சிறார் கோர்ட்டில் நடந்தது.
வாலிபர் சான்நவாஸ் சேக் மீதான வழக்கு விசாரணை தின்டோஷி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு மாணவியை கற்பழித்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story