நவீன சைபர் ஆய்வகம், பயிற்சி மைய கட்டிடம் : முதல்-மந்திரி அடிக்கல் நாட்டினார்
பாந்திராவில் நவீன சைபர் ஆய்வகம், பயிற்சி மைய கட்டிடத்திற்கான அடிக்கல்லை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாட்டினார்.
மும்பை,
மும்பை பாந்திராவில் மாநில போலீஸ் வீட்டு வசதி மற்றும் நல கழகம் சார்பில் போலீசாருக்கு 10 மாடி கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடத்தில் முதல் 6 தளங்களில் நவீன வசதிகளுடன் கூடிய சைபர் ஆய்வகம், போலீஸ் நிலையம் மற்றும் போலீசார் பயிற்சி மையம் அமைய உள்ளது.
மேல் உள்ள 4 தளங்களில் மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கான வீடுகள் கட்டப்பட உள்ளன. கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அடிக்கல்லை நாட்டினார்.
இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அடுத்த தலைமுறை புதிய சவால்களை சந்திக்க நேரிடும். அந்த சவால்களை எதிர்கொள்ள வசதியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். 40 சைபர் ஆய்வகங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின் றன. நமது போலீஸ் படை தொழில்நுட்பத்தில் பலமாக இருக்க வேண்டும். அதற்காக 1,000 போலீசாரை தேர்வு செய்து உரிய பயிற்சி அளிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விழாவில் மாநில மந்திரி தீபக் கேசர்கர், பூனம் மகாஜன் எம்.பி., மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பார்வே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story