தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனில் காலியாக உள்ள 1,200 பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாநில பொதுச்செயலாளர் இளவரி பேட்டி


தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனில் காலியாக உள்ள 1,200 பணியிடங்களை நிரப்ப வேண்டும் மாநில பொதுச்செயலாளர் இளவரி பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2019 4:15 AM IST (Updated: 16 Jun 2019 10:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனில் காலியாக உள்ள 1,200 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மாநில பொதுச்செயலாளர் இளவரி கூறினார்.

வேலூர், 

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் பணியாளர் சங்க (ஐ.என்.டி.யு.சி) மாநில செயற்குழு கூட்டம் வேலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.பழனி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எம்.வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

வேலூர் மண்டல செயலாளர் சுரேஷ்பாபு வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் கா.இளவரி ஆண்டறிக் கையை சமர்ப்பித்து சிறைப்புரையாற்றினார்.

பொருளாளர் ஜெயபால் கண்மணி வரவு, செலவு கணக்கு சமர்ப்பித்தார். தமிழ்நாடு ஐ.என்.டி.யூ.சி. துணைத்தலைவர் முனுசாமி, பொதுச் செலயாளர் நல்லமுத்து, வில்வசன், பணியாளர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் பாண்டியன், துணைத்தலைவர் பூமிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

வேலூர் மண்டல தலைவர் ஏழுமலை, அமைப்பு செயலாளர் ெஜயபால் உள்பட மாநிலத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சிவில் சப்ளைஸ்கார்ப்பரேஷனில் 20 ஆண்டுகளுக்கு மேலாளாக தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றி வரும் 500 பேரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.

முடிவில் மாநில இணைச் செயலாளர் என்.செல்வம் நன்றி கூறினார்.

பின்னர் மாநில பொதுச்செயலாளர் இளவரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசனில் மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 1,200 பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிற்சங்கங்களுக்காக அங்கீகார தேர்தலில் ஐ.என்.டி.யூ.சி. சங்கம் 2-வது பெரிய சங்கமாக வெற்றி பெற்றுள்ளது.

எனவே தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் பணியாளர் சங்கத்தை அரசு அங்கீகரிக்க வேண்டும். 1984-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அமுதம் சில்லறை அங்காடிகள் செயல்பட்டு வந்ததை மூடிவிட்டார்கள். அவற்றை மீண்டும் அரசு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கூறினார்.

Next Story