மாவட்ட செய்திகள்

ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு + "||" + The Collector's speech should be a joint effort by the public to raise awareness about blood transfusions

ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு

ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் கலெக்டர் பேச்சு
ரத்ததானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கலெக்டர் ஆனந்த் கூறினார்.
திருவாரூர்,

திருவாரூர் புதிய ரெயில் நிலையத்தில் இருந்து உலக ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஆனந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி தெற்குவீதி வழியாக நகராட்சி அருகில் உள்ள வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை அடைந்தது.


அங்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார். பின்னர் கலெக்டர் ரத்தம் வழங்கி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் கடந்த ஆண்டில் அதிக முறை ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிழ்களும், பதக்கங்களையும் வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தானத்தில் சிறந்தது ரத்த தானம். பொதுமக்கள் இடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. விபத்து காலத்தில் உயிரை காப்பது ரத்தம் தான். மேலும் ரத்த சோகை உள்ளிட்ட நோய்களினால் ரத்தத்தின் தேவையை அதிகமாக தேவைபடுகிறது. எனவே பொதுமக்கள் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்ய வேண்டும். ரத்த தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை முதல்வர் விஜயகுமார், சுகாதாரத்துறை இணை இயக்குனர் உமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஸ்டான்லி மைக்கேல், தாசில்தார் நக்கீரன், துணை இயக்குனர் (காசநோய்) புகழ், மாவட்ட ரத்த பரிமாற்ற அலுவலர் பிரதியுஷாமெரவாலா, மாவட்ட மேற்பார்வையாளர் விஜி, பள்ளி தாளாளர் வடுகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரியில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.
2. டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
3. இடி, மின்னல் ஏற்படும்போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் வேண்டுகோள்
இடி, மின்னல் ஏற்படும் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் உமா மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
4. காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா ஆய்வு
நோயாளிகளுக்கு டாக்டர்களால் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கலெக்டர் சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
5. ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர் கலெக்டர் ஆய்வு செய்வதாக உறுதி
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மனு கொடுக்க வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது கலெக்டர் ஆனந்த் நேரில் சந்தித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.