நடிகர் சங்க தேர்தலில் எதிர் அணியினர் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர் விஷால் குற்றச்சாட்டு
நடிகர் சங்க தேர்தலில், எதிர் அணியினர் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர் என விஷால் குற்றம் சாட்டினார்.
கரூர்,
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரு அணியினரும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று நாடக நடிகர்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று கரூர் மாவட்டம், வெள்ளியணைக்கு விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் வந்தனர். பின்னர் வெள்ளியணையில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள கரூர் மாவட்டத்தை சேர்ந்த நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்டனர்.
கூட்டத்தில் நடிகர் விஷால் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்ற முறை தேர்தலில் நின்றபோது மூத்த நாடக கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அது நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்ட இடையூறாக இருந்த சிக்கல்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டுள்ளது. எதிர் அணியினர் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் என நினைக்கின்றனர். அது நடக்காது. ஏனென்றால் நடிகர் சங்கத்திற்கு என்று தனிப்பட்ட பாரம்பரியம் உள்ளது. அதன் நிர்வாகத்திற்கு யார் வந்தால் நல்லது என்பது சங்க உறுப்பினர்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் நடிகர்கள் நாசர், கோவை சரளா, பூச்சிமுருகன், கருணாஸ், ராஜேஷ், கரூர் மாவட்ட நாடக நடிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story