குடும்பத்தகராறில் விபரீதம்; கணவன்- மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


குடும்பத்தகராறில் விபரீதம்; கணவன்- மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 Jun 2019 5:15 AM IST (Updated: 18 Jun 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டேரியில் குடும்பத்தகராறில் கணவன்- மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை ஓட்டேரி செல்லப்பா சந்து பகுதியில் வசிப்பவர் தன்ராஜ் (வயது 45). மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி தீபா (38). இவர்களுக்கு ஆரிஷ் (17), லோகேஷ் (14) என 2 மகன்கள் உள்ளனர்.

நேற்று மதியம் தன்ராஜ் தனது நண்பருடன் மது குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனால் தீபாவுக்கும், தன்ராஜிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த தீபா தனது கணவர் தன்ராஜ் கண்எதிரே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தனது கண்முன்பே மனைவி இறந்ததால் அச்சம் அடைந்த தன்ராஜும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story