மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த 2–வது நாளில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை + "||" + On the 2nd day of romantic marriage College professor suicide

காதல் திருமணம் செய்த 2–வது நாளில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை

காதல் திருமணம் செய்த 2–வது நாளில் கல்லூரி பேராசிரியர் தற்கொலை
ஊத்துக்கோட்டை அருகே காதலித்து திருமணம் செய்த 2 நாட்களில் கல்லூரி பேராசிரியர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகுமார் (வயது 26). சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

இவர் அதே கிராமத்தை சேர்ந்த உறவுக்கார பெண்ணான திலகா (20) என்பவரை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 13–ந் தேதி இவர்களது திருமணம் திருப்பதி கோவிலில் நடந்தது.

இந்நிலையில் திருமணமான 2–வது நாளில் கடந்த 15–ந்தேதி சனிக்கிழமையன்று சந்திரகுமார் ஊரில் உள்ள வயல்வெளிக்கு சென்றார். அங்கு இருந்த பூச்சி கொல்லி மருந்து (வி‌ஷம்) திடீரென்று எடுத்து குடித்து விட்டார். பின்னர் வாயில் நுரைதள்ளிய நிலையில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தற்கொலை
ஊத்தங்கரை, சூளகிரி பகுதிகளில் என்ஜினீயர் உள்பட 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
2. பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்கு கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் - சட்டசபையில் தகவல்
பிளஸ்-2 வரை அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு கல்லூரியில் 50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
3. வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் முதுகலை பட்டதாரி பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
4. தமிழ் கலாசாரத்தால் ஏற்பட்ட காதல்: ஜப்பான் பெண், கும்பகோணம் விஞ்ஞானியை மணந்தார் உறவினர்கள் நெகிழ்ச்சி
தமிழ் கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு காதலில் விழுந்த ஜப்பான் பெண், கும்பகோணம் விஞ்ஞானியை மணந்தார். இந்த திருமணம் மணமக்களின் உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
5. ராக்கிங்கை தடுக்க கல்லூரிகளில் குழுக்கள் அமைத்து கண்காணிப்பு - கலெக்டர் உத்தரவு
கல்லூரிகளில் ராக்கிங் நடக்காமல் தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.