மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது + "||" + 2 arrested for selling cannabis

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். வண்டலூர்– மீஞ்சூர் வெளி வட்ட சாலை குன்றத்தூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் வேகமாக சென்றனர்.

இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தபோது அவர்கள் கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத் என்ற சரத்குமார்(வயது26), கேளம்பாக்கத்தை சேர்ந்த சதீஷ் (22) என்பதும், இருவரும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து இரவு நேரங்களில் வடமாநில வாலிபர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா, ஒரு மோட்டார் சைக்கிள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. சரத்குமார் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாநகராட்சி ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது
திருப்பூர் மாநகராட்சி ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2. குன்னூர் அருகே, மூதாட்டி வீட்டில் நகை-பணம் திருடியவர் கைது
குன்னூர் அருகே மூதாட்டி வீட்டில் நகை-பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
3. சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து மின்னணு கழிவுகள் இறக்குமதி; தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
4. திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்தவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி திருவாரூரில் மாணவர்-இளைஞர் பெருமன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
5. தனியார் தொழிற்சாலையில் திருடிய மராட்டிய தொழிலாளி கைது
தனியார் தொழிற்சாலையில் திருடிய மராட்டிய தொழிலாளி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 16 கிலோ வெள்ளிக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.