ராகுல்காந்தி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம்


ராகுல்காந்தி பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 20 Jun 2019 4:15 AM IST (Updated: 20 Jun 2019 2:10 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி காங்கிரசார் கொண்டாடினர்.

நாகர்கோவில்,

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மார்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இதற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கேக் வெட்டினார். விழாவில் 11 பெண்களுக்கு தையல் எந்திரமும், 250 பேருக்கு வேட்டி-சேலைகள் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் குழித்துறை நகர தலைவர் அருள் ராஜ், ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் அனந்த கிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆமோஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் டதி பள்ளி சந்திப்பில் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் அலெக்ஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரின்ஸ் எம்.எல்.ஏ. கேக் வெட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர்கள் வைகுண்டதாஸ், அசோக்ராஜ், ராஜதுரை, மகாலிங்கம், கிறிஸ்டி ரமணி, சுயம்பு உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் அப்துல் வாஹீது தலைமையில் கல்லுக்கூட்டம் சந்திப்பில் அங்கன்வாடி மைய குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. அப்போது கேக் வெட்டி, இனிப்பு வழங்கப்பட்டது.

குளச்சல் நகர காங்கிரஸ் சார்பில் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்தார். இதில் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கீரிப்பாறையில் அரசு ரப்பர் கழக காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் ராகுல்காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஞாலம் பகுதியில் நடந்த விழாவில் தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் சகாயராஜ், ரவிக்குமார், விஜிஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story