கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக எஸ்றா சற்குணம் மீது மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு
கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக எஸ்றா சற்குணம் மீது மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை,
பா.ஜனதா கட்சியின் மயிலாடுதுறை நகர தலைவர் மோடிகண்ணன், மயிலாடுதுறையில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் எஸ்றா சற்குணம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக மோடி கண்ணன், கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், கிறிஸ்தவ பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர், தமிழகத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி அவதூறாக பேசி கலவரத்தை தூண்ட முயற்சித்தார்.
சமூக வலைதளங்களில்...
இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி அவர், இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி உள்ளார். அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 25-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

Related Tags :
Next Story