நீடாமங்கலத்தில் இருந்து கடலூருக்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது


நீடாமங்கலத்தில் இருந்து கடலூருக்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பிவைக்கப்பட்டது
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் இருந்து கடலூருக்கு பொதுவினியோக திட்டத்துக்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம்,

நீடாமங்கலத்தில் இருந்து கடலூருக்கு 1,250 டன் அரிசி பொதுவினியோக திட்டத்துக்காக சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி பாமணி மத்திய சேமிப்பு கிடங்கு, மன்னார்குடி, ஆதனூர், கீழபாண்டி ஆகிய ஊர்களில் உள்ள வட்ட கிடங்குகள் ஆகியவற்றில் இருந்து 100 லாரிகளில் அரிசி நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சுமைதூக்கும் தொழிலாளர்கள் அரிசி மூட்டைகளை சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். அதைத்தொடர்ந்து 1,250 டன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு ரெயில் கடலூருக்கு புறப்பட்டு சென்றது.

Next Story