கேரளாவில் மாயமான பெண் கரூர் ரெயில் நிலையத்தில் மீட்பு


கேரளாவில் மாயமான பெண் கரூர் ரெயில் நிலையத்தில் மீட்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 21 Jun 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெண் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

கரூர்,

கரூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவில் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பெண் ஒருவர் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். இதைக்கண்ட போலீசார் அவரிடம் விசாரித்த போது, கேரளா மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த சாம் என்பவரது மனைவி சுமிதா ஜான்சன் (வயது 34) என்பதும், குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் கணவரிடம் கோபித்துக் கொண்டு வந்து விட்டதும் தெரிய வந்தது. மேலும் அவர் மாயமானது தொடர்பாக கேரள மாநிலம் கீழ்வாய்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிந்து போலீசார் அவரை தேடியதும் தெரிய வந்தது. இதையடுத்து கரூர் ரெயில்வே போலீசார், கீழ்வாய்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் மீட்கப்பட்ட சுமிதா ஜான்சனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Next Story