புத்தாம்பூரில் புறக்காவல் நிலையம் போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
புத்தாம்பூரில் புதிய புறக்காவல் நிலையத்தை போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்.
அரவக்குறிச்சி,
கரூர்-மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட புத்தாம்பூரில் அமைந்துள்ள டெக்ஸ்பார்க் என்னும் இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் நேற்று முன்தினம் காலை திறந்து வைத்து செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். அப்போது, புறக்காவல் நிலையத்தின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அசோகன், கும்மராஜா, துரைராஜ் கல்யாண்குமார், சிற்றரசு அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் நிருபர்களிடம் கூறுகையில், புத்தாம்பூர் உள்பட சுற்றுவட்டார பகுதி மக்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட புகார்களை அளிக்க நீண்ட தூரத்தில் உள்ள அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு வரும் சிரமத்தை தவிர்க்கும் விதமாகவே இங்கு புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கரூர் டெக்ஸ்பார்க்கில் அதிகப்படியான பெண்கள் பல்வேறு இடங்களில் இருந்து வேலைக்கு வருவதால் அவர்களின் பாதுகாப்பு கருதியும், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து இடர்பாட்டினை சீர் செய்யும் பொருட்டும் 24 மணி நேரமும் இங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர், என்றார்.

Related Tags :
Next Story