தூத்துக்குடியில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் யோகா செய்த போலீசார்
தூத்துக்குடியில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் யோகா செய்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் போலீசார் யோகா செய்தனர்.
உலக யோகா தினம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள் சார்பில் நேற்று உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா தலைமையில் போலீசார் யோகாசனங்களை செய்தனர். போலீஸ்காரர் ராஜலிங்கம் யோகா பயிற்சி அளித்தார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, துணை சூப்பிரண்டுகள் பிரகாஷ் (நகரம்), ரமேஷ் (மாவட்ட குற்றப்பிரிவு), மாரியப்பன் (ஆயுதப்படை), பயிற்சி துணை சூப்பிரண்டு பூரணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் யோகா பற்றிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை தாங்கினார். சைன்யோகா பவர் நிறுவனர் தனலட்சுமி, சுந்தரவடிவேல், சபர்ணா ஆகியோர் யோகாசன பயிற்சி அளித்தனர். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் காசிராஜன் கலந்து கொண்டு பேசினார். தேசிய மாணவர் படை அதிகாரிகள் அனில்குமார், சிவக்குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேசினர். ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி அசோக், ஹெலன் புளோரா, நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் தேவராஜ், பொன்னுத்தாய், நாகராஜன், பொன்ரதி, ரெமோனா ஆகியோர் செய்து இருந்தனர்.
வ.உ.சி. கல்லூரி
தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் மாணவ-மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் வீரபாகு தலைமை தாங்கினார். தேசிய மாணவர்படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர்.
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடந்தது. பள்ளி துணை முதல்வர் ரூபி ரத்னபாக்கியம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ். சிவராம், முத்தையா, விவேகானந்த கேந்திரா மாநில பயிற்சியாளர் பகவத தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தனர். இதில் திரளான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்தனர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஜெயாசண்முகம் செய்து இருந்தார்.
உடன்குடி
உடன்குடி வில்லி குடியிருப்பில் உள்ள மனவளக்கலை மன்றத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று காலை யோகா, உடற்பயிற்சி நடந்தது. மன்ற தலைவர் ஆர்.பி.கோதண்டராமன், பொருளாளர் பரமசிவம், செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் கலந்துகொண்டு யோகா பற்றி விளக்கி பேசினர். இதேபோல் உடன்குடி வடக்கு பஜாரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் யோகா பயிற்சி நடந்தது. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் திருநாகரன், நகர செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.
உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி யில் யோகா பயிற்சி நடந் தது. புனித யாகப்பர் ஆலய உதவி பங்குதந்தை பிரபு தலைமை தாங்கினார். வாழும் கலை பயிற்சி மைய இயக்குனர் இனிகோ யோகா கலை பற்றி மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகா செய்தனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் லெரின் டிரோஸ், பள்ளி தலைமை ஆசிரியை லூர்துஎட்வின் பிளாரன்ஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். உடன்குடி தேரியூர் ஸ்ரீராமகிருஷ்ணா சிதம்பரேசுவரர் மேல்நிலைப்பள்ளியில் யோகா தின விழா நடந்தது. ஆசிரியர் லிங்கபாண்டி யோகா வகுப்பு நடத்தினார். இதில் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story