மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம்
கரூரில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் கூட்டம் அலைமோதியது.
கரூர்,
கரூர் கோவை ரோட்டிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் தொடங்கியது. கரூர் இயக்குதலும், காத்தலும் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தாமரை தலைமையில் உதவி செயற்பொறியாளர்கள் திருமோண்டி, ரவிசந்திரன், மகாலிங்கம், பிரபு, மாலதி, கனிகைமார்த்தாள் ஆகியோர் கலந்து கொண்டு மின்நுகர்வோரிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றனர். இதில் ஏராளமானமின் நுகர்வோர் வீடு, கடை, விவசாய மின் இணைப்புகள் பழைய உரிமையாளர் பெயரிலேயே நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதை இந்த முகாம் மூலம் ரூ.200 கட்டணம் செலுத்தி தங்களது பெயருக்கு மாற்றி கொண்டு பயனடைந்தனர். முகாமின்போது ஆவணங்களை சரிபார்த்த அதிகாரிகள் பின்னர் உடனடியாக மின்நுகர்வோரின் விண்ணப்பத்தினை பரிசீலித்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 600-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கரூர், செங்குந்தபுரம், ஆண்டாங்கோவில், மின்னாம்பள்ளி, வாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மின்நுகர்வோர் இந்த முகாமுக்கு வந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. மின் இணைப்பு தொடர்பான முகாமை, கரூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் வினோதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மின் இணைப்பில் மாற்றம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும், எந்தெந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது பற்றியும் அவர் எடுத்துரைத்து தெளிவுபடுத்தினார். தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக முகாம் நடந்தது.
Related Tags :
Next Story