அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு யாகம் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நடந்தது
மழை வேண்டி தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் அ.தி.மு.க. சார்பில் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் சிறப்பு யாகம் நடந்தது.
தஞ்சாவூர்,
மழை பெய்தால் தான் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்பதால் மழை வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் நடத்தும்படி அ.தி.மு.க.வினருக்கு கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள தஞ்சபுரீஸ்வரர் கோவிலில் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மழை வேண்டி சிறப்பு யாகம் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமையில் நேற்றுகாலை நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகம் நடந்தது. யாகம் முடிந்தவுடன் புனித நீர் வைக்கப்பட்டிருந்த குடம் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, தஞ்சபுரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.
அன்னதானம்
இதில் எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராஜ், முன்னாள் எம்.பி. பரசுராமன், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், சாமிவேல், ரவிச்சந்திரன், கோவி.தனபால், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அனைத்துப்பிரிவு நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story