களியக்காவிளையில் லாட்டரி வியாபாரிகள் திடீர் கடை அடைப்பு
களியக்காவிளையில் லாட்டரி சீட்டு விற்ற மாற்றுத்திறனாளியை போலீசார் பிடித்து சென்றதால் லாட்டரி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை,
குமரி மாவட்டத்தின் எல்லையான களியக்காவிளையில் சாலையின் ஒரு பகுதியில் தமிழகமும், மறு பகுதியில் கேரளாவும் உள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், கேரளாவில் தடை செய்யப்படவில்லை.
இதனால், களியக்காவிளையில் பி.பி.எம். சந்திப்பில் கேரள பகுதியில் ஏராளமான லாட்டரி சீட்டு கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு தமிழக பகுதி வழியாகதான் லாட்டரி சீட்டுகள் கொண்டு செல்வதாகவும், இந்த கடைகளை மூட வேண்டும் எனவும் களியக்காவிளை போலீசார் வியாபாரிகளை எச்சரித்து வந்தனர். இதுதொடர்பாக பலக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்தநிலையில், களியக்காவிளை பி.பி.எம். சந்திப்பில் பகருதீன் (வயது 50) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் வாய்ப்பேச முடியாத மாற்றுத்திறனாளி.
நேற்று பகருதீன் குமரி-கேரள எல்லையில் உள்ள சோதனை சாவடியில் லாட்டரி சீட்டுகளுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, குமரியில் லாட்டரி சீட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறி களியக்காவிளை போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த லாட்டரி விற்பனையாளர்கள் தங்களின் கடைகளை அடைத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், திருவனந்தபுரம் மாவட்ட லாட்டரி விற்பனை நடவடிக்கை குழு தலைவர் விசுவம்பரன் தலைமையில் பி.பி.எம். சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால், அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
இந்த பிரச்சினை தொடர்பாக பாறசாலை போலீசார், களியக்காவிளை போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து களியக்காவிளை போலீசார் பிடித்து சென்ற பகருதீனை விடுவித்தனர். அதன்பின்பு, மறியல் முயற்சி கைவிடப்பட்டது. இதற்கிடையே, பகருதீனை போலீசார் தாக்கியதாகவும், இதுகுறித்து சங்கத்தில் ஆலோசனை நடத்தி போலீசாரை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்றும் லாட்டரி விற்பனை நடவடிக்கை குழு தலைவர் விசும்பரன் தெரிவித்தார்.

Related Tags :
Next Story