சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு: தண்ணீரை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு
சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் தண்ணீரை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது என அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டி உள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
போதிய மழை இல்லாத காரணத்தால் ஏரிகள் வறண்டு சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவோம் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
ஆனால் தண்ணீரை வைத்து தி.மு.க. அரசியல் செய்கிறது. சென்னை மக்களுக்கு கொண்டு வரும் தண்ணீரை மறிப்பது மக்களுக்கு செய்யக்கூடிய சேவையா? என பத்திரிகை வாயிலாக நான் கேட்டுக்கொள்கிறேன்.
மழைவேண்டி கோவில்களில் யாகம் நடத்துவதால் பெரிய செலவு ஆகி விடாது. இதுபோல் அனைத்து மாநிலங்களிலும் யாகம் நடைபெறுகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது நாங்கள் யாகம் நடத்தி உள்ளோம். யாகம் செய்தால் மழை வரும் என்ற ஐதீகம் இருப்பதால், யாகம் செய்கின்றோம்.
மின்வெட்டு இல்லை
தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இல்லை. அவ்வாறு ஒரு நிமிடம் இருந்தால் கூட நான் பொறுப்பேற்க தயாராக உள்ளேன். மின்உற்பத்தி தேவைக்கு அதிகமாகவே உள்ளது. 600 மெகாவாட் மின்சாரத்தை வெளி மாநிலத்திற்கு வழங்கி வருகின்றோம்.
இயற்கையின் சீற்றம் காரணமாக ஏதாவது, ஒரு பகுதியில் மின்தடை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால் மின்வெட்டு என்பது கிடையாது.
அணைகளில் தண்ணீர் இல்லாததால் மின் உற்பத்தி குறைவாக உள்ளது. ஆனால் கூடங்குளம் மற்றும் காற்றாலை மின்சாரம் அதிகமாக உள்ளது. தேவைக்கு அதிகமாக மின்சாரம் இருப்பதால், பராமரிப்பிற்காக அனல்மின் நிலையத்தில் இருந்து வரும் மின்சாரத்தை நிறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story