திருவள்ளூர் அருகே விபத்து கார் மீது லாரி மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
திருவள்ளூர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். திருப்பதி சென்று விட்டு திரும்பியபோது இந்த விபத்து நடந்துள்ளது.
திருவள்ளூர்,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் 3-வது குறுக்குத்தெரு எல்.ஐ.சி. காலனி, விருட்சம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் சாய் சந்திரசேகர் (வயது 40). இவரது மனைவி புஷ்கலா (35). இவர்களுக்கு கைலாஷ்(9), தருண்கிருஷ்ணா(3) என 2 மகன்களும் இருந்தனர்.
சாய்சந்திரசேகர் இன்சூரன்ஸ் ஏஜண்டாக உள்ளார். புஷ்கலா ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மூத்த மகன் கைலாஷ் சென்னையில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் சாய் சந்திரசேகர் குடும்பத்துடன் காரில் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அந்த கார் திருவள்ளூர் - திருப்பதி நெடுஞ்சாலையில் திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் கூட்டுச்சாலையில் வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே சென்னையில் இருந்து திருப்பதி நோக்கி சென்றுகொண்டு இருந்த கன்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக கார் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.
இடிபாடுகளில் சிக்கி காரை ஓட்டி வந்த சாய் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். இதைக்கண்ட கன்டெய்னர் லாரி டிரைவர் வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடிவிட்டார்.
காயம் அடைந்த அவரது மனைவி புஷ்கலா, மகன்கள் தருண்கிருஷ்ணா, கைலாஷ் ஆகிய 3 பேரை போலீசார் அவ்வழியாக சென்றவர்கள் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே புஷ்கலா பரிதாபமாக இறந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தருண்கிருஷ்ணா, சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். சிறுவன் கைலாஷ் மட்டும் லேசான காயத்துடன் உயிர்தப்பினான். அவன் சிகிச்சை பெற்று வருகிறான்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story