ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மரக்காணம் முதல் ராமேசுவரம் வரை எதிர்க்கட்சியினர் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.
திருத்துறைப்பூண்டி,
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் தொடங்கி ராமேசுவரம் வரை கடற்கரையோரம் கடந்த 12-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஜூன் 23-ந் தேதி (நேற்று) மனித சங்கிலி போராட்டம் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது.
அதன்படி நேற்று மாலை 4 மணியளவில் மரக்காணத்தில் இருந்து ராமேசுவரம் வரை சுமார் 600 கி.மீ. தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க. தவிர தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, தி.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மக்கள் அதிகாரம், வணிகர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் பங்கேற்றன.
மரக்காணத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், மாசிலாமணி, சீத்தாபதி சொக்கலிங்கம், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.அவர்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை புவனேஸ்வரர் கோவிலில் இருந்து வடஅகரம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு கைகளை கோர்த்துக்கொண்டு நின்றனர்.
புதுச்சேரி அண்ணா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் புதுவை மாநில கட்டிட தொழிலாளர் நலசங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மனித உரிமைகள் கூட்டமைப்பினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.
முத்துப்பேட்டையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் எம்.பி. விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மனித சங்கிலி போராட்டம் முத்துப்பேட்டையில் தொடங்கி ஆலங்காடு, உதயமார்த்தாண்டபுரம், எடையூர் சங்கேந்தி, பாண்டி, கள்ளிக்குடி, செம்படவன்காடு, தம்பிக்கோட்டை கீழக்காடு வரை நடந்தது.
நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து பரவை வரை நடந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன், தமிமுன் அன்சாரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, புதுப்பள்ளி, வேட்டைகாரணிருப்பு, திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், மண்டபம், திருப்பாலைக்குடி, உப்பூர், தொண்டி ஆகிய இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளைச் சேர்ந்தவர் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story