வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்
நியாட் - கடல்சார் தொழிநுட்ப தேசிய மையம் நியாட் (NIOT) எனப்படுகிறது.
சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் செயல்படும் இந்த ஆராய்ச்சி மையத்தில் தற்போது திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட ஆராய்ச்சி உதவியாளர், திட்ட தொழில்நுட்பனர் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயர் மற்றும் பட்டதாரி என்ஜினீயர்களுக்கும், முதுநிலை பொறியியல் தொழில்நுட்பம் படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூலை 9-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு நாளில் நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.niot.res.in/ என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொண்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.
செயில்
இந்திய உருக்கு ஆணைய நிறுவனமான செயில் (SAIL) நிறுவனத்தின் கொல்கத்தா நிலக்கரி டிவிஷன் பிரிவில் ஓவர்மேன், மைனிங் சர்தார், சர்வேயர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 72 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பின் நிலக்கரி சுரங்க ஓவர்மேன், சர்வேயர் சான்றிதழ் படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை www.sailcareers.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 14-ந் தேதியாகும்.
ஐ.ஐ.டி.
இந்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின். புதுடெல்லி கிளையில் முதன்மை திட்ட ஆராய்ச்சியாளர், முதுநிலை திட்ட ஆராய்ச்சியாளர் பணிக்கு 8 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை http://ird.iitd.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு 5-7-2019-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆராய்ச்சி மையம்
மத்திய அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் டிஜிட்டல் நூலக பிரிவில் (t.k.d.l.) ஆராய்ச்சி உதவியாளர், இணை ஆராய்ச்சியாளர் போன்ற பணியிடங்களுக்கு 27 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். முதுநிலை படிப்பு படித்தவர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரங்களை www.csir.res.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நேர்காணலில் கலந்து கொள்ளலாம். ஜூலை 18 முதல் 20-ந் தேதி வரை இதற்கான நேர்காணல் நடக்கிறது.
இஸ்ரோ
இஸ்ரோ விண்வெளி அமைப்பின் கீழ் செயல்படும் திரவ விண்கல ஆய்வு மையத்தில் மெக்கானிக், டர்னர், மெஷினிஸ்ட், வெல்டர் போன்ற பணியிடங்களுக்கு 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.சி.வி.டி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிளுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் வருகிற ஜூலை 2-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை www.lpsc.gov.in என்ற இணைய தளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கவும்.
Related Tags :
Next Story