தர்மபுரி அருகே ஏரியை தூர்வாரி தடுப்பணையை சீரமைத்த பொதுமக்கள்
தர்மபுரி அருகே ஏரியை தூர்வாரி தடுப்பணையை பொதுமக்கள் சீரமைத்தனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த தொப்பூர் ஊராட்சியில் செக்காரப்பட்டி, காணிக்காரம்பட்டி, உம்மியம்பட்டி, கோம்பைக்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் முழுவதும் மிக உயர்ந்த மலைகளுக்கு இடையில் மூன்று பக்கம் சூழப்பட்டு அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த மலைகளில் இருந்து வரும் தண்ணீரை சேமிக்க தொப்பூர் பகுதியில் தொப்பையாறு என்ற அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. ஆனால் அதன் மறுபுறம் மலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேமிக்க கடந்த 1993-ம் ஆண்டு கோம்பைகாடு பகுதியில் கிராம மக்களுக்காக வனத்துறை சார்பில் ஓபுல்ராயன் கசிவுக்குட்டை அமைக்கப்பட்டது.
இந்த கசிவு குட்டையில் மழைக்காலங்களில் சேமிக்கப்படும் நீரால் இந்த சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் கிடைத்து வந்தது. இதனால் சுமார் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த கசிவுநீர் குட்டை உரிய பராமரிப்பின்றி இருந்து வந்தது. இதனால் மழை பெய்யும் காலங்களில் மழையில் இருந்து வருகின்ற தண்ணீர் கசிவுநீர் குட்டையில் தேங்கி நிற்காமல் வெளியேறி வீணாகச் சென்று வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால், தர்மபுரி மாவட்டம் முழுவதும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் கிடைக்காமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே செக்காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் நிலத்தடி நீரைச் சேமிக்கவும் மலைகளிலிருந்து வரும் மழை தண்ணீரை சேமித்து வைக்கவும், ஏரிகளை தூர்வார வேண்டும் என முடிவெடுத்தனர். இந்த கோம்பைக்காடு கசிவுநீர் குட்டையை தூர்வாரி கரையை பலப்படுத்தி இதை பராமரித்தால் வருகிற தென்மேற்கு பருவ மழையில் பெறுகின்ற தண்ணீரை சேமித்து வைத்து குடிநீர் பஞ்சத்தை போக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு முயற்சிக்க வேண்டும் என இளைஞர்கள் கிராம மக்களிடையே எடுத்துரைத்தனர். வறட்சியின் நிலையை அறிந்த கிராம மக்கள் இளைஞர்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து இளைஞர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் உதவியுடன் அந்த பகுதியில் உள்ள ஏரியை தூர்வாரினர். மேலும் அங்குள்ள பழைய தடுப்பணையை சீரமைத்து 2 அடி உயரப்படுத்தினர். இந்த ஏரியை சுற்றிலும் 500 வகையான நாட்டு மரங்களை நட்டு பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஏரியில் தண்ணீர் வரும் காலங்களில் அதிக அளவிலான பறவைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த பறவைகளுக்கு தேவையான உணவு இங்கே கிடைப்பதற்கு ஏதுவாக கொய்யா, நாவல் உள்ளிட்ட செடிகளை நட்டு வைத்துள்ளனர். மேலும் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறும் காலங்களில், தண்ணீரை வீணாக்க கூடாது என்பதற்காக உபரி நீர் செல்லும் பாதைகளில் சுமார் 15 அடி ஆழத்திற்கு மழை நீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து தண்ணீரை சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இளைஞர்களின் இந்த முயற்சிக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story