தென்காசி, கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


தென்காசி, கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 25 Jun 2019 6:16 PM GMT)

தென்காசி, கடையநல்லூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து நேற்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தென்காசி,

தென்காசியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், அனைத்து பகுதிகளுக்கும் சீராக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் நகர தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பஸ்நிலையம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர செயலாளர் சாதிர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ரசாக், அவை தலைவர் முத்துப்பாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி அமைப்பாளர் கோமதிநாயகம், பொருளாளர் ஷேக் தாவூது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் பலர் கலந்துகொண்டு கோஷமிட்டனர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு, 1-வது வார்டில் லாரி மூலம் பொதுமக்களுக்கு தி.மு.க. சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

கடையநல்லூரில் நகரசபை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர செயலாளர் சேகனா தலைமை தாங்கினார்.

33 வார்டுகளுக்கும் சீரான குடிநீர் வழங்க வேண்டும். சாலை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் காலிக்குடங்களுடன் கலந்துகொண்டனர்.

Next Story