தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்


தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி பொதுமக்கள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 7:18 PM GMT)

சிவகிரி அருகே தெருவிளக்குகள் ஒளிராததை கண்டித்து மின்கம்பத்தில் மண்எண்ணெய் விளக்கை கட்டி தொங்க விட்டு பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகிரி,

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ரங்கசமுத்திரம் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக ஒளிரவில்லை.

அதனால் இந்த பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீதிகளில் நடந்து செல்ல அச்சப்பட்டனர். எனவே தெருவிளக்குகளை சீரமைத்து ஒளிரச்செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன்காரணமாக பொதுமக்கள் அந்தப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றில் கம்பு கட்டி அதில், மண்எண்ணெய் விளக்கை கட்டி தொங்கவிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மின்வாரிய அதிகாரிகள், அங்கு சென்று மண்எண்ணெய் விளக்கை அப்புறப்படுத்தினார்கள்.

பின்னர் பழுதடைந்து காணப்பட்ட அனைத்து மின்விளக்குகளையும் சீரமைத்து ஒளிரச்செய்தனர்.

பொதுமக்களின இந்த நூதன போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story