திருவாரூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையோர வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையோர வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகில் ஏ.ஐ.டி.யூ.சி. சாலையோர வியாபார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திசேகரஆசாத், சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சாலையோர வியாபார தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர விற்பனை குழு கூட்டத்தை உடனே கூட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை மதிக்காமல் நடக்கும் நகராட்சி நிர்வாகத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

Related Tags :
Next Story