யோகா போட்டியில் சாதனை படைத்த கரூர் மாணவிக்கு பாராட்டு


யோகா போட்டியில் சாதனை படைத்த கரூர் மாணவிக்கு பாராட்டு
x
தினத்தந்தி 27 Jun 2019 4:00 AM IST (Updated: 27 Jun 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

உலக யோகா தினத்தையொட்டி தேசிய யோகா ஒலிம்பியாட் (என்.ஒய்.ஓ) சார்பில் டெல்லியில் யோகா போட்டிகள் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது.

குளித்தலை,

உலக யோகா தினத்தையொட்டி தேசிய யோகா ஒலிம்பியாட் (என்.ஒய்.ஓ) சார்பில் டெல்லியில் யோகா போட்டிகள் கடந்த 18-ந்தேதி நடைபெற்றது. இதில் 14 வயதுகுட்பட்டோர் பிரிவில், குழு யோகாவில் காஞ்சிபுரம், விருதுநகர், கரூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களை சேர்ந்த 4 மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கரூர் மாவட்டம் சார்பில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மாணவி அபர்னாஸ்ரீயும் பங்கேற்றார். இந்த குழு யோகாவில் மாணவி அபர்னாஸ்ரீ உள்ளிட்ட 4 மாணவிகள் முதலிடம் பெற்று தங்க பதக்கம் பெற்றுள்ளனர். இந்தநிலையில் நேற்று தனது பள்ளிக்கு வந்த அபர்னாஸ்ரீயை, பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா, ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோர் பாராட்டி வரவேற்றனர்.

Next Story