செங்கோட்டை, கடையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


செங்கோட்டை, கடையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 28 Jun 2019 3:30 AM IST (Updated: 27 Jun 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை, கடையத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

செங்கோட்டை,

நெல்லை மாவட்டம் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்கோட்டை போலீசார் சார்பில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. செங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் ஜெகதீஸ்போஸ், உதவி தலைமை ஆசிரியர் காதர்மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முருகன் வரவேற்றார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பேரணி பள்ளியிலிருந்து தொடங்கி, பஸ்நிலையம், கீழபஜார், கே.சி.ரோடு, தாலுகா அலுவலகம் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. முடிவில் தேசிய மாணவர் படை கமாண்டிங் அலுவலர் சுதாகர் நன்றி கூறினார்.

கடையத்திலும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதை முன்னிட்டு கடையம் சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரபிள்ளை போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து பேசினார். சப்-இன்ஸ்பெக்டர் தலைகவசத்தின் அவசியம் குறித்து பேசினார். தொடர்ந்து நடந்த பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை மீரா, பள்ளி ஆசிரியர்கள் வேலு, திரிகூடராசப்பன், சங்கரநாராயணன், அருணாசலம், கனிகுமார், விக்னேஷ், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story