வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி வாலிபர் கைது


வங்கியில் வேலை வாங்கி தருவதாக ரூ.7 லட்சம் மோசடி வாலிபர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2019 3:45 AM IST (Updated: 28 Jun 2019 1:25 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகேயுள்ள நொச்சிப்பட்டியை சேர்ந்தவர் தாரணி (வயது 26). இவர், கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், கரூர் ஜவகர் பஜாரில் டி.என்.பி.எஸ்.சி., வங்கி தேர்வுகளுக்கான பயிற்சியை அளிக்கும் ஒரு தனியார் பயிற்சி நிறுவனம் உள்ளது.

இதன் நிர்வாக பொறுப்பிலுள்ள கரூர் தாந்தோன்றிமலை வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்த சரவணன் (29), ஐ.பி.பி.எஸ். என்கிற வங்கி பணிக்கான எழுத்து தேர்வினை நடத்தும் நிறுவனம் மூலம் எனது தங்கை உள்ளிட்டோருக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் பெற்றார். ஆனால் கூறியபடி வேலை வாங்கி தராமல், இழுத்தடித்தபோது தான் அவர் ஏமாற்று வேலையில் ஈடுபடுவது தெரியவந்தது.

வாலிபர் கைது

இதனை அறிந்ததும் பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே இது பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இந்த புகாரின் பேரில், கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சரவணனை கைது செய்தார்.

Next Story