இறந்த மேலாளரின் உடலை மயானம் வரை தூக்கி சென்ற நடிகர் அமிதாப்பச்சன் புகைப்படம் வைரலானது
பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், இறந்த மேலாளரின் உடலை மயானம் வரை தூக்கி சென்ற புகைப்படம் வைரலானது.
மும்பை,
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவரும் இறந்த ஒருவரது உடலை சுமந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த புகைப்படம் போலி என்ற தகவலும் பரவியது. இந்தநிலையில், அவர் தன்னிடம் மேலாளராக பணிபுரிந்து வந்த ஷீத்தல் ஜெயினின் உடலை தான் சுமந்து சென்றது தெரியவந்து உள்ளது.
ஷீத்தல் ஜெயின் கடந்த 36 ஆண்டுகளாக நடிகர் அமிதாப் பச்சனிடம் மேலாளராக பணிபுரிந்து வந்தவர் ஆவார். தனது 77-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில் தனது மகன் அபிஷேக் பச்சனுடன் கலந்து கொண்ட நடிகர் அமிதாப்பச்சன் ஷீத்தல் ஜெயின் உடலை மகனுடன் இணைந்து ஜூகுவில் உள்ள மின்மயானம் வரை தூக்கி சென்றார் என்பது தெரியவந்து உள்ளது.

Related Tags :
Next Story