தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் பேச்சு


தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 30 Jun 2019 4:30 AM IST (Updated: 30 Jun 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஆனந்த் கூறினார்.

குடவாசல்,

வீடுகளை சுற்றி கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து தூய்மை காவலர்களுக்கு வழங்க வேண்டும். வீட்டையும், கிராமத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலர் ஸ்ரீலேகா, உதவி இயக்குனர் சந்தானம், தாசில்தார் ஜீவானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருமக்கோட்டை

திருமக்கோட்டையில் சேவை மைய கட்டிடத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோட்டூர் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. திருட்டுத்தனமாக மோட்டார் வைத்து குடிநீர் உறிஞ்சுவதை கண்காணிப்பது, பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தாமல் இருப்பது, பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகளை தேர்வு செய்வது, பசுமை வீடுகள் பயனாளிகளை தேர்வு செய்வது, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் நன்றி கூறினார்.

கோட்டூர்

இதேபோல கோட்டூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மூத்த உறுப்பினர் ராமதாஸ் தலைமை தாங்கினார். கோட்டூர் ஊராட்சி ஒன்றிய ஊர் நல அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார். காவிரி டெல்டா மாவட்டங் களில் பேரழிவை ஏற் படுத்தும் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இருள்நீக்கி ஊராட்சியில் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம் என்ற தீர்மானத்தை, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் முன்மொழிந்து பேசினார். இதில் சின்னகுருவாடி, நெருஞ்சனக்குடி, வடசிராங்குடி, இருள்நீக்கி, சோத்திரியம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story