மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு தூதுவர்களாக இருக்க வேண்டும் துணைவேந்தர் பேச்சு


மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு தூதுவர்களாக இருக்க வேண்டும் துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 30 Jun 2019 4:00 AM IST (Updated: 30 Jun 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு தூதுவர்களாக இருக்க ேவண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்றைய இளைஞர்கள் போதைப் பொருட்களால் கவரப்படுவதன் மூலம் உடல் நலப் பாதிப்பையும் மனநலப்பாதிப்பையும் அடைகின்றனர்.

போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் மக்கள் தொகை கடந்த ஓராண்டில் மட்டும் 3.1 கோடியாக உள்ளது. மன அழுத்தம், நாகரிக மோகம், மன இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் பழக்கம் ஆகியவையே போதைப் பொருட்களுக்கு அடிமையாவதற்கு காரணங்களாகும்.

தூதுவர்கள்

போதைப் பொருட்களுக்கு அடிமையாதல் ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் காணப்படுகிறது. போதைப் பொருட்களுக்கு அடிமையாவதிலிருந்து முதலில் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அடுத்து இது தொடர்பான விழிப்புணர்வை நாம் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக மாணவர்கள் போதைப் பொருள் தடுப்புத் தூதுவர்களாக மாறி சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற போதை ஒழிப்பு சட்டவிரோத கடத்தல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம், கல்வியியல் கல்லூரி வளாகத்திலிருந்து பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் வரை நடைபெற்றது. ஊர்வலத்தை பல்கலைக்கழக துணைவேந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ்பிரபு வரவேற்றார். முடிவில் பழனிசாமி நன்றி கூறினார்.

Next Story