பிரசவத்தின்போது கர்ப்பிணி இறப்பு புகார் எதிரொலி: சிவகாசியில் தனியார் ஆஸ்பத்திரி ஸ்கேன் மையத்துக்கு சீல் வைப்பு
சிவகாசியில் பிரசவத்தின் போது கர்ப்பிணி இறந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் இயங்கி வந்த ஸ்கேன் மையத்துக்கு மாவட்ட இணை இயக்குனர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
சிவகாசி,
சிவகாசியில் செயல்பட்டு வந்த பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரசவத்தின் போது கர்ப்பிணி ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் விருதுநகர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் இணை இயக்குனர் மனோகரனுக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். அந்த புகாரின் பேரில் டாக்டர் மனோகரன் நேற்று சிவகாசியில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அவர் அங்கு பணியாற்றி வரும் டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பிரசவ டாக்டர் இல்லாமல் மாதத்துக்கு 140 பிரசவங்கள் வரை பார்த்து தெரியவந்தது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் இனிவரும் காலங்களில் உரிய கட்டமைப்பு வசதி இல்லாமல் பிரசவம் பார்க்கக் கூடாது என எச்சரித்தார். பின்னர் மருத்துவமனையில் இயங்கி வந்த ஸ்கேன் மையத்துக்கு சென்றார். அங்கு சிறிது நேரம் ஆய்வு செய்தார். பின்னர் அந்த ஸ்கேன் மையத்துக்கு சீல் வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு உரிய அறிவிப்பை தெரிவிக்கும் வகையில் மருத்துவமனையின் முன்பகுதியில் அறிவிப்பு பலகை ஒன்றையும் வைத்தார்.
இந்த ஆய்வின் போது சிவகாசி தாசில்தார் வானதி, சிவகாசி அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் அய்யனார் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மாவட்ட மருத்துவ அதிகாரி நடவடிக்கைக்கு உட்பட்ட தனியார் ஆஸ்பத்திரியில் 2 டாக்டர்கள், 34 நர்சுகள், 8 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த மருத்துவமனையில் 35 படுக்கை வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
பேட்டி
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலம் இணை இயக்குனர் மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த மருத்துவமனையில் மாதந்தோறும் சராசரியாக 140 பிரசவங்கள் நடக்கிறது. இதற்கு 3 மகப்பேறு டாக்டர்கள் தேவை. ஆனால் இங்கு மகப்பேறு டாக்டர் இல்லாமல் மருத்துவமனையை நடத்தும் டாக்டர் ஒருவரே பிரசவம் பார்த்துள்ளார். கடந்த வாரம் இந்த மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பிரசவத்தின்போது இறந்துள்ளார். தமிழகம் சுகாதாரத்தில் 2-வது இடத்தில் இருந்து 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு இதுபோன்ற பிரசவ கால மரணங்கள் தான் காரணம். விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பிரசவ கால மரணங்களை தடுக்கவும், மருத்துவமனைகளில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்ட முழுவதும் அவ்வபோது ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனை மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது இந்த மருத்துவமனையில் 12 பெண்களுக்கு பிரசவத்துக்கு பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் விருப்பப்பட்டால் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். இல்லை என்றால் அவர்கள் விருப்பம் போல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். அதற்கான வசதியை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மூலம் இங்கேயே ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். பிரசவத்துக்காக இனி இந்த ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகள் யாரையும் அனுமதிக்ககூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story