புனேயில் கனமழையால் பரிதாபம் அடுக்குமாடி கட்டிட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குழந்தைகள் உள்பட 15 பேர் பலி
புனேயில் கனமழை காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பீகாரில் இருந்து பிழைப்பு தேடி வந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு இந்த துயரம் நேர்ந்தது.
புனே,
மராட்டியத்தில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. மும்பை, புனே உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் புனே நகரில் உள்ள கோந்த்வா பகுதியில் தலாப் பள்ளிவாசல் அருகே குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கட்டுமானம் நடந்து வரும் இடத்தின் ஒரு ஓரத்தில், தற்காலிக கூடாரங்கள் அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்தனர். இந்த கூடாரங்கள், அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவரை ஒட்டி அமைக்கப்பட்டு இருந்தன. அந்த சுற்றுச்சுவர் 20 முதல் 22 அடி உயரம் கொண்டது.
நேற்று முன்தினம் பகல் முழுவதும் உழைத்த கட்டுமான தொழிலாளர்கள் இரவில் சாப்பிட்டு விட்டு தூங்கினர். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் தொழிலாளர்களின் கூடாரங்களையொட்டி உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்தது.
அந்த சுவர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த தொழிலாளர்களின் கூடாரங்கள் மீது விழுந்து அமுக்கியது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், மோட்டார் சைக்கிள் போன்ற வாகனங்களும் கூடாரங்கள் மீது விழுந்தன.
இந்த துயர சம்பவத்தில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரோடு புதைந்தனர். மேலும் உயிர் தப்பிய சில தொழிலாளர்கள் உதவி கேட்டு அபய குரல் எழுப்பினர். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர், மாநகராட்சி மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்த 3 தொழிலாளர்களை உயிருடன் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் 15 பேரை பிணமாக தான் மீட்க முடிந்தது. இவர்களில் 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள், ஒரு சிறுமி அடங்குவர்.
உயிரிழந்தவர்கள் அலோக் சர்மா (வயது28), மோகர் சர்மா (24), ரவி சர்மா (19), அமன் சர்மா (19), லெட்சுமிகாந்த் சகானி (22), சுனில் சிங் (35), ஒவி தாஸ் (2), சோனாலி தாஸ் (6), பிமா தாஸ் (38), சங்கீதா தேவி (26), அஜித்குமார் (7), ரேகல்குமார் (5), நீவா தேவி (30), தீப்ரஞ்சன், அவதேஷ் சிங் என்று தெரியவந்தது.
பலியானவர்கள் பீகார் மாநிலம் காதிகர் மாவட்டத்தில் உள்ள மகிசார், பல்ராம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள். பீகாரில் இருந்து குடும்பத்துடன் பிழைப்பு தேடி மராட்டியம் வந்தவர்ளுக்கு இந்த துயரம் நேர்ந்து விட்டது.
முதல்கட்ட விசாரணையில், கனமழை பெய்த நேரத்தில் கட்டுமான பணிக்காக மிகவும் ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு வந்தது. அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சுற்றுச்சுவரை நெருங்கும் வகையில் பள்ளம் தோண்டப்பட்டதால் மண் உறுதித்தன்மையை இழந்து சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது தெரியவந்தது.
இந்த விபத்தை தொடர்ந்தை கட்டுமான பணிக்காக பள்ளம் தோண்டியவர்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புக்காக சுற்றுச்சுவர் அமைத்தவர்கள் என 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
விபத்தில் லேசான காயத்துடன் உயிர் தப்பிய பிமால் சர்மா கூறியதாவது:-
நான் தூங்கி கொண்டு இருந்த இடத்தில் மரம் இருந்தது. எனவே சுற்றுச்சுவர் இடிபாடுகள் மற்றும் கீழே விழ இருந்த வாகனங்கள் மரத்தில் சிக்கி கொண்டன. இதனால் இடிபாடுகளில் சிக்காமல் உயிர் தப்பினேன். உதவி கேட்டு கதறினேன். அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் வந்து என்னை உயிருடன் மீட்டனர். இந்த துயரத்தில் எனது தம்பியை இழக்க நேரிட்டு விட்டது. இவ்வாறு அவர் உருக்கமாக கூறினார்.
இந்த சம்பவத்தை அடுத்து முதல்கட்டாக அங்கு நடந்துவந்த கட்டுமான பணிகளை நிறுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. மேலும் உயிர் தப்பிய தொழிளாளர்கள் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் பலியானவர்களின் உடல்கள் விமானம் மூலம் பீகார் தலைநகர் பாட்னாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு இருந்து சொந்த ஊருக்கு உடல்கள் கொண்டு செல்லப்படும் என்று புனே மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
புனேயில் நேற்று கட்டுமான தொழிலாளர்களின் தற்காலிக கூடாரங்கள் மீது அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். இந்த நிலையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடத்தின் கட்டுமான அதிபர்கள் விவேக் அகர்வால்(21), பிபுல் அகர்வால்(21) மற்றும் ஜக்தீர்பிரசாத் அகர்வால்(வயது64), சச்சின் அகர்வால்(34), ராஜேஷ் அகர்வால்(27) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல விபத்து நடந்த இடத்தில் கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் பன்கஜ் வோரா, சுரேஷ் ஷா, ராஷ்மிகாந்த் காந்தி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் அவர்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான அதிபர்களான பிபுல் அகர்வால், விவேக் அகர்வால் ஆகிய 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Related Tags :
Next Story