தமிழர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வையுங்கள் கல்வி அதிகாரி பிரபா அலெக்சாண்டர் வேண்டுகோள்
தமிழர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைக்க வேண்டும் என்று பெங்களூரு வடக்கு வட்ட கல்வி அதிகாரி பிரபா அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு அல்சூரில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் தாய்மொழி மற்றும் தமிழ் பயிற்று மொழி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடந்தது. இந்த கருத்தரங்கில் பெங்களூரு, சிவமொக்கா, பத்ராவதி, துங்கபத்ரா, கிரியூர், குடகு, சாம்ராஜ்நகர், உப்பள்ளி-தார்வார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ் ஆசிரியர்கள், தமிழ் வழி பள்ளிகளில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பெங்களூரு வடக்கு வட்ட கல்வி அதிகாரி அலெக்சாண்டர் பேசியதாவது:-
தமிழை கற்று கொடுப்பதில் தமிழ் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானதாகும். கர்நாடகத்தில் மொழி சிறுபான்மையினருக்கு தாய் மொழி கல்வி உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திலும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதனால் தமிழர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் மொழியில் படிக்க வைக்க வேண்டியது அவசியமானதாகும். அப்போதுதான் அவர்களது அறிவு கூர்மை அடையும்.
கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தங்களது பிள்ளைகளை தாய் மொழியான தமிழில் படிக்க வைத்தால் சிறப்பாக இருக்கும். தமிழ் மொழி வளர்ச்சி அடையும். புதுமையான முறையில் கற்பித்தல் மற்றும் அணுகுமுறையால் குழந்தைகளின் கல்வி அறிவை ஆசிரியர்களால் மேம்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் கர்நாடக தமிழ் கல்வி வளர்ச்சிக்கான செயல் திட்டம் என்ற புத்தகத்தை வெளியிட்டு சிறுமலர் கல்வி குழுமத்தின் நிறுவனர் மதுசூதன பாபு பேசுகையில், "தமிழ் ஆசிரியர்கள் மற்ற குழந்தைகளை தமிழ் வழி கல்வி படிக்க வைக்க ஊக்குவிப்பதை போல, தங்களது குழந்தைகளுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்க வேண்டும். கர்நாடகத்தில் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும். இதற்காக நமது இல்லங்களில் இருந்து தமிழை வளர்க்க வேண்டியது அவசியமானதாகும்.
தமிழர்கள் தங்களது தாய் மொழியான தமிழில் பேச வேண்டும். தாய் மொழி கல்வியை அனைத்து பள்ளிகளிலும் கற்று கொடுக்க வேண்டும். மாணவர்களை நல்வழிப்படுத்தி, நல்ெலாழுக்கங்களை கற்று கொடுப்பது ஒவ்வொரு ஆசிரியரின் கடமையாகும்," என்றார்.
அதைத்தொடர்ந்து, கர்நாடகத்தில் தமிழ் மொழி கல்வியை தக்க வைத்தல், ஊக்குவித்தல், தமிழ் மொழியை கற்பித்தலில் புதிய முறைகள், கர்நாடக தமிழ் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய தலைப்புகளில் ஆசிரியர்கள் பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து இந்திய தமிழ் சங்க பேரவை தலைவர் மீனாட்சி சுந்தரம், பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன், தொழில்அதிபர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story