தூத்துக்குடியில் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்
தூத்துக்குடியில் கியாஸ் டேங்கர் லாரி உரிமை யாளர்கள் நேற்று காலையில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் பாரத் பெட்ரோலியம் கியாஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துக்காக, கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு எல்.பி.ஜி. கியாஸ் கொண்டுவரப்படுகிறது. அதே போன்று கொச்சியில் இருந்தும் கியாஸ் கொண்டு வரப்படுகிறது. இந்த கியாஸ் சுமார் 40 கியாஸ் டேங்கர் லாரிகள் மூலம் அந்த கியாஸ் நிறுவனத்துக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த நிறுவனத்தில் வைத்து சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பப்பட்டு, லாரிகள் மூலம் தூத்துக்குடி, தேனி, விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும், கேரளாவில் திருவனந்தபுரத்துக்கும் லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், ஒப்பந்தப்படி அனைத்து லாரிகளுக்கும் எண்ணெய் நிறுவனங்கள் பணி அளிக்க வேண்டும். அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தது. அதன்படி நேற்று காலையில் தூத்துக்குடியில் உள்ள கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மதுரை பைபாஸ் ரோட்டில் டேங்கர் லாரிகளை நிறுத்தி வைத்து இருந்தனர். மேலும் 15 நாட்களுக்கு தேவையான கியாஸ் நிறுவனத்தில் இருப்பு உள்ளதால், கியாஸ் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Related Tags :
Next Story