விபத்தில் சிறுவன், சிறுமி பலி: வேன் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்


விபத்தில் சிறுவன், சிறுமி பலி:  வேன் டிரைவருக்கு 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 2 July 2019 4:15 AM IST (Updated: 2 July 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

தானே மாவட்டம் பிவண்டியில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி ரஞ்சித் குடாடே என்ற டிரைவர் தனது வேனை பின்பக்கமாக எடுத்தார்.

மும்பை,

வேகமாக பின்நோக்கி சென்ற வேன் அங்குள்ள சுற்றுச்சுவர் மீது மோதியது. இதில் சுவர் இடிந்து அங்கு விளையாடி கொண்டு இருந்த ஜோதி (வயது7) என்ற சிறுமியும், சமிர் பார்தி (5) என்ற சிறுவனும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் ரஞ்சித் குடாடேவை கைது செய்து தானே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நிறைவில், அவர் மீதான அலட்சியம் காரணமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய கோர்ட்டு அவருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

Next Story