திருப்பூரில் ரெயில் மோதி 2 பேர் பலி


திருப்பூரில் ரெயில் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 July 2019 4:31 AM IST (Updated: 2 July 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் ரெயில் மோதிய விபத்தில் 2 பேர் பலியாயினர்.

திருப்பூர்,

திருப்பூர் ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சோமனூர்-வஞ்சிபாளையம் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் அடையாளம் தெரியாத வாலிபர் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த வாலிபர் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும், ரெயிலில் சென்று கொண்டிருந்த போது, தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல காலேஜ்ரோடு, சலவைபட்டறை பகுதி ரெயில்வே தண்டவாளத்தில், ரெயில் மோதி இறந்த நிலையில் ஒரு ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து, அங்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்புசாமி தலைமையிலான போலீசார், பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்த நபர் ஊதா நிற டீ-சர்ட், சிமெண்டு நிறத்தில் வெள்ளை கோடு போட்ட லுங்கி அணிந்திருந்தார். ஆனால், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story