மனநலம் பாதித்த சிறுவனிடம் தகாத உறவில் ஈடுபட்டவருக்கு 10 ஆண்டு ஜெயில்
மும்பையை சேர்ந்த 14 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்தான். கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி சிறுவனின் ஆடையில் ரத்த கறைகள் இருப்பதை அவனது தாய் பார்த்தார்.
மும்பை,
சிறுவனின் பெற்றோர் அவனை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது டாக்டர்கள் நடத்திய சோதனையில் சிறுவனிடம் யாரோ தகாத உறவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனிடம் தகாத உறவில் ஈடுபட்டது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சஞ்சய் கதம் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சஞ்சய் கதமை கைது செய்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இதில், வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுவனிடம் தகாத உறவில் ஈடுபட்ட சஞ்சய் கதமுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.
Related Tags :
Next Story