பர்கூரில் பயங்கரம் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி குத்திக்கொலை தையல் தொழிலாளி கைது
பர்கூரில் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த தையல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பர்கூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள மொண்டிகானூரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 33). தையல் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் கடையும் வைத்துள்ளார். இவரது மனைவி அர்ச்சனா (29). இவர் பர்கூர் எம்.ஜி.ஆர்.நகர் அருகில் உள்ள இருளர் காலனியைச் சேர்ந்தவர். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தங்கராஜ் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்தனர். இந்த நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
குத்திக்கொலை
இதனால் அர்ச்சனா கோபித்துக் கொண்டு பர்கூர் இருளர் காலனியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு கடந்த 2 மாதமாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கராஜ் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று அவரை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அப்போது அர்ச்சனா வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த தங்கராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மனைவியை சரமாரியாக குத்தினார்.
இதில் அர்ச்சனா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் அர்ச்சனாவை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தங்கராஜை பிடித்து பர்கூர் போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அர்ச்சனாவின் உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அர்ச்சனா பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பம் நடத்த வர மறுத்ததால் மனைவியை கணவரே கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த பயங்கர சம்பவம் பர்கூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story