மும்பை மலாடு பகுதியில் காரில் சென்ற 2 பேர் வெள்ளத்தில் சிக்கி பலி
மலாடு பகுதியில் காரில் சென்ற 2 பேர் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானார்கள்.
மும்பை,
மும்பை மலாடு பட்டான்வாடி பகுதியில் உள்ள சப்வேயில் பலத்த மழை காரணமாக 10 அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்து இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் சப்வே வெள்ளத்தில் கார் ஒன்று சிக்கியிருப்பதை சிலர் பார்த்தனர். உடனடியாக அவர்கள் காரை மீட்டு வெளியே கொண்டு வந்த னர். அப்போது காருக்குள் 2 பேர் சிக்கி இருந்தனர். உடனடியாக 2 பேரும் மீட் கப்பட்டு சதாப்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 பேரும் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பேரும் மலாடு கிழக்கு பகுதியை சேர்ந்த இர்பான் கான் (வயது38), குல்சாத் சேக் (40) ஆவர். 2 பேரும் நேற்று முன்தினம் இரவு காரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
இதில் இரவு 11.30 மணியளவில் சப்வே பகுதியில் வந்த போது கார் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இதையடுத்து அவர்கள் கார் கதவை திறந்து வெளியே வர முயன்றுள்ளனர். ஆனால் அவர்களால் கதவை திறக்க முடியவில்லை. எனவே அவர்கள் காருக்குள் சிக்கி தண்ணீரில் மூழ்கி பலியானது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story