தங்கையை வெட்டிக்கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
தங்கையை வெட்டிக்கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
தூத்துக்குடி,
தங்கையை வெட்டிக்கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு நேற்று தீர்ப்பு கூறியது.
வெட்டிக்கொலைதூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தை சேர்ந்த ராமலிங்கம் மகன் தாமஸ் (வயது 55), விவசாயி. இவருடைய தங்கை வசந்தா (50). இவர் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். தாமசின் பெற்றோர் 75 மாடுகளை வளர்த்து வந்தனர். அதில் பாதி மாடுகளை தனக்கு தருமாறு தாமஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
கடந்த 14–9–2014 அன்று வசந்தா, ஒரு ஜோடி காளை மாடுகளை விற்பனை செய்தார். இந்த மாடுகளை வாங்கியவர்கள் செய்துங்கநல்லூர் குத்துக்கல் ரோடு அருகே லோடு ஆட்டோவில் ஏற்றினர்.
இதனை அறிந்த தாமஸ் அங்கு விரைந்து வந்தார். அங்கு நின்ற வசந்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த தாமஸ் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் வசந்தாவை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
ஆயுள் தண்டனைஇதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் விசுவநாத் குற்றம் சாட்டப்பட்ட தாமசுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஆண்ட்ரூமணி ஆஜரானார்.