நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு: அதிகாரிகள் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி கும்பகோணத்தில் பரபரப்பு


நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு: அதிகாரிகள் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி கும்பகோணத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 4 July 2019 4:15 AM IST (Updated: 4 July 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகள் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் சர்ச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சர்பூதீன். இவருடைய மனைவி பாத்திமாமுத்து (வயது55). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வசித்து வருகிறார். இந்த இடம் தொடர்பாக பாத்திமாமுத்துவுக்கும், தேவராஜன் என்பவருக்கும் இடையே கும்பகோணம் கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் தேவராஜன் தரப்பினருக்கு சொந்தமானது என கடந்த ஜனவரி மாதம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று கோர்ட்டு ஊழியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பாத்திமாமுத்து வசித்து வந்த இடத்தை கையகப்படுத்துவதற்காக சென்றனர்.

அப்போது நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாத்திமாமுத்து திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர் மீது தண்ணீரை ஊற்றி, சமாதானம் செய்தனர்.

அதிகாரிகள் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story