மத்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு கட்டிகொடுத்த வீடுகளில் சிங்களர்கள் குடியேற்றம் பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு
இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு சார்பில் கட்டிக்கொடுத்த வீடுகளில் சிங்களர்கள் குடியேறி உள்ளனர் என்று பழ.நெடுமாறன் குற்றம் சாட்டி உள்ளார்.
தஞ்சாவூர்,
இலங்கையில் முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்து 10 ஆண்டுகள் ஆகிறது. அதன் நினைவேந்தல் மாநாடு தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நாளை(சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம்(ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இதில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்து சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
இலங்கையில் போர் முடிந்தும் தமிழர்கள் இன்னும் சொந்த ஊருக்கும், வீடுகளுக்கும் திரும்ப முடியவில்லை. தமிழர்களுடைய நிலங்களை சிங்கள ராணுவம் அபகரித்து வைத்துள்ளது. போர் குற்றம் தொடர்பாக ஐ.நா.சபை கொண்டு வந்த எந்த தீர்மானத்தினையும் இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ஏற்கெனவே ராஜபக்சே கடைபிடித்த அதே கொள்கையை தான் சிறிசேனாவும் கடைபிடித்து வருகிறார். இவை தொடர்பாகவும் இந்த மாநாட்டில் ஆராய்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இலங்கை எதிர்கட்சி தலைவரும் எம்.பி.யுமான சம்பந்தம், தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்தி போராடவும் தயார் என கூறியுள்ளார். இதனால் அங்குள்ள நிலைமையை நாம் புரிந்து கொள்ளலாம். தமிழர்களுக்கு இன்னும் உரிமைகள் கிடைக்காமல் உள்ளதாக தெரிகிறது. அங்குள்ள மீனவர்கள் இன்னும் மீன்பிடிக்க கூட செல்ல முடியாமல், தொழிலாளர்களாகவே நடத்தப்படுகின்றனர். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வீடுகள் கட்டிக்கொடுக்க காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரூ.1000 கோடி செலவிடப்பட்டது. அதே போல் பா.ஜ.க. ஆட்சி காலத்திலும் ரூ.1000 கோடி செலவிடப்பட்டது. இதில் இந்திய அரசு சார்பில், இலங்கையில் தமிழர் பகுதிகளில் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தமிழர்களுக்கு பதிலாக சிங்களர்கள் குடியேறியுள்ளனர். இதில் இந்திய அரசு தலையிட்டு கண்காணிக்கவோ, தட்டிக்கேட்கவோ இல்லை.
இலங்கை தமிழர் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதுள்ள பாரதீய ஜனதா அரசும் ஒரே கொள்கையைத்தான் பின்பற்றுகின்றன. இலங்கையை சீனாவிடம் இருந்து பிரித்து தனது நட்பு நாடாக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அயனாபுரம் முருகேசன், உலகத்தமிழர் பேரமைப்பு துணைத்தலைவர் குபேந்திரன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பழனிராஜன், கரிகாலன், இருதயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story