திருமருகல் அருகே தரைப்பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி சிக்கியது
திருமருகல் அருகே தரைப்பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் டேங்கர் லாரி சிக்கியது.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் நாகை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் திட்டச்சேரி, சீயாத்தமங்கை, திருமருகல், ஏனங்குடி, புத்தகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
பாலம் கட்ட தோண்டப்படும் இடங்களில் எச்சரிக்கை விளக்குகள் மற்றும் பலகைகள் இல்லாததால், இந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சீயாத்தமங்கையில் பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில், மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் விழுந்து படுகாயமடைந்தனர்.
லாரி பள்ளத்தில் சிக்கியது
இந்த நிலையில் தற்போது ஏனங்குடி சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் எச்சரிக்கை விளக்கு ஏதும் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வர முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
நேற்று அதிகாலை சன்னாநல்லூரில் இருந்து திருமருகல் நோக்கி டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ஏனங்குடி சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில், இந்த டேங்கர் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சிக்கியது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Related Tags :
Next Story