மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் திருச்சி சரக புதிய டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் பேட்டி
மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று திருச்சி சரக புதிய டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறினார்.
திருச்சி,
திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக இருந்த லலிதாலெட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து புதிய டி.ஐ.ஜி.யாக பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இவர் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் அருகே ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலகத்தில் நேற்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் ஜியாவுல்ஹக் (திருச்சி), செல்வராஜ் (புதுக்கோட்டை), சீனிவாசன் (அரியலூர்), பாண்டியராஜன் (கரூர்), திஷாமித்தல் (பெரம்பலூர்) மற்றும் போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொதுமக்கள் அச்சமின்றி போலீஸ் நிலையங்களில் புகார்களை தெரிவிக்கும்போது, குறைந்தபட்சம் மனு ரசீது வழங்கவோ அல்லது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி சரகத்துக்குட்பட்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய 5 மாவட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது முக்கிய பிரச்சினைகள் இருக்கும். அவற்றை கண்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நெடுஞ்சாலைகளில் விபத்துகளை குறைக்க முன்னுரிமை வழங்கப்படும். நான்குரோடு சந்திப்புகளில் எல்.இ.டி. விளக்குகள் அமைத்து வாகன ஓட்டிகள் விபத்தின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி சரகத்துக்குட்பட்டுள்ள நெடுஞ்சாலைகளில் எங்கெங்கெல்லாம் எல்.இ.டி. விளக்குகள் அமைக்க வேண்டும் என்பதை அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். இரவுநேரங்களில் நெடுஞ்சாலையோரங்களில் லாரிகளை நிறுத்துவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ரோந்து போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். பொதுமக்கள் புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு செல்ல வேண்டும். அங்கு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தையோ அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தையோ அணுக வேண்டும். அங்கும் நடவடிக்கை இல்லையென்றால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் கடந்த 2003-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்கு சேர்ந்தார். காவல்துறையில் தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அவர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாகவும், அதனை தொடர்ந்து ரெயில்வே டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story